சென்ட்ரல் பினான்ஸ் பணிப்பாளர்கள் சபையின் புதிய நியமனங்கள்

2 ஜூலை 2021 மூலம் CF Admin

2021 ஜூலை 01 முதல் அமலுக்கு வரும் வகையில் நிறுவனத்தின் பொது முகாமையாளர் (சட்ட) சமிந்த சம்பத் ஹெட்டியாராச்சி நிறுவனத்தின் பெருநிறுவன விவகார பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1999 ஆம் ஆண்டில் கொமர்ஷல் பாங்க் ஆஃப் சிலோன் பி.எல்.சியில் நிர்வாகப் பயிற்சியாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர்ரூபவ் ஜூலை 2002 இல் சென்ட்ரல் பினான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக (மீட்டெடுப்புகள்) இணைந்தார்; மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் பல சிரேஷ்ட முகாமைத்துவ பதவிகளை வகித்தார். சி.எஸ். ஹெட்டியராச்சி இலங்கை உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞராக உள்ளதுடன்ரூபவ் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலை (எல்.எல்.பி) பட்டம் பெற்றவருமாவார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முதுகலை முகாமைத்துவ நிறுவத்தில் (PIM) இருந்து எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.

சி.எஸ். ஹெட்டியராச்சி நிதித்துறையில் 19 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்டுள்ளவர். இதில் சென்ட்ரல் பினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தில் 18 ஆண்டுகளுக்கும் மேலான சேவையூம் அடங்கும். அவர் பின்வரும் சென்ட்ரல் பினான்ஸ் பி.எல்.சி. இணை நிறுவனங்களின் இயக்குநராகவூம் பணியாற்றுகிறார்; சென்ட்ரல் இண்டஸ்ட்ரீஸ் பி.எல்.சிரூபவ் சி.எஃப் இன்சு+ரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிடெட்ரூபவ் டெஹிகாமா ஹோட்டல் கம்பெனி லிமிடெட்ரூபவ் சென்ட்ரல் டிரான்ஸ்போர்ட் அன்ட் டிராவல்ஸ் லிமிடெட்ரூபவ் மற்றும் மார்க் மெரைன் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட்.

இலங்கையின் குத்தகை சங்கத்தின் (எல்.ஏ.எஸ்.எல்) தற்போதைய தலைவர் திரு. சி.எஸ். ஹெட்டியராச்சி ஆகும். மேலும் இலங்கையின் கடன் தகவல் பணியகத்தின் (CRIB) பணிப்பாளராகவூம் செயற்படுகின்றார். இலங்கை மத்திய வங்கியின் நிதி அமைப்பு ஸ்திரத்தன்மை ஆலோசனைக் குழுவின் (எஃப்.எஸ்.எஸ்.சி.சி) உறுப்பினராகவூம் உள்ளார். அவர் இலங்கை சேம்பர் ஆஃப் காமர்ஸின் LASL இன் பிரதிநிதியாகவூம்ரூபவ் சிலோன் சேம்பர் ஆஃப் காமர்ஸின் நிதி மற்றும் மூலதன சந்தைகளுக்கான தேசிய நிகழ்ச்சி நிரல் குழுவின் உறுப்பினராகவூம் இருந்தார். அவர் பைனான்ஸ் அவசஸ் அசோசேஸன் ((FHA) இயக்குநராக பணியாற்றினார்.

Licensed by the Monetary Board of the Central Bank of Sri Lanka under the Finance Business Act No.42 of 2011 and Finance Leasing Act No 56 of 2000 | Reg No: PQ 67| Credit Rating A-(lka) Outlook Stable affirmed by Fitch Ratings Lanka Limited