சென்ட்ரல் ஃபினான்ஸ் நிறுவனம் புதிய சந்தைப்படுத்தல் பணிப்பாளரை நியமனம் செய்துள்ளது

31 ஜூலை 2018 மூலம் user

பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல் மற்றும் தயாரிப்பு அபிவிருத்தி) சந்திக குஷான்
ஹெட்டியாராச்சிரூபவ் 2018 ஜுலை 17 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.

இவர் 1998ம் ஆண்டு செலிங்கோ அபிவிருத்தி வங்கியில் முதலீட்டு ஆய்வாளராக தனது தொழில் வாழ்வினை ஆரம்பித்தார். சந்திக சென்ட்ரல் ஃபினான்ஸ் நிறுவனத்தில் 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் முகாமையாளராக (கடன்கள்) இணைந்து கொண்டது தொடக்கம் நிறைவேற்று பணிப்பாளராக நியமனம் பெறும் வரை பல சிரேஷ்ட நிர்வாக பதிவிநிலைகளை வகித்தார். அவர் இங்கிலாந்து Chartered Institute of Management Accountants(ACMA) அங்கத்தவர் என்பதுடன் இங்கிலாந்து University of Wales பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றுள்ளார்.

வங்கி சாராத நிதிச்சேவை பிரிவில் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்ட சந்திக ஹெட்டியாராச்சிஇ 17 ஆண்டுகள் சென்ட்ரல் ஃபினான்ஸ் நிறுவனம் PLCயில் கடமையாற்றியூள்ளார். சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் (IFC) உட்பட பல சர்வதேச அபிவிருத்தி நிறுவனங்களுக்கு ஆலோசகர பல பணிகளை முன்னெடுத்துள்ளார். அவர் சென்ட்ரல் ஃபினான்ஸ் நிறுவனத்தின் கீழுள்ள அதன் துணை நிறுவனமான CF Insurance Brokers(Pvt),Ltd மற்றும் இலங்கை லீசிங் சங்கம் ஆகியற்றின் பணிப்பாளர் சபை அங்கத்தவர் ஆவார்.