வாகனத் தொகுதி வாடகைக்கு விடுதல் என்பது என்ன?
உங்களின் விருப்பத்திற்குரிய வேண்டியதொரு வாகனததிற்கு நிதியளிக்க மிகவூம் வசதியான சிக்கனமான வழியாகும். மேலும் இந்த வாகன கொள்முதல் உங்கள் நிறுவன ஐந்தொகையில் உள்ளடங்காது. ஒரு ஒழுங்கான மாதாந்தக் கொடுப்பனவூடன் உங்களுக்கு இரண்டு விரிவான தேர்வூகளுண்டு. ஒன்று பாதைப்பராமரிப்பை உள்ளடக்கியதுஇ மற்றையது அச்சேவை தவிர்ந்தது.
பாதைப் பராமரிப்புடனான சேவையை நீங்கள் தெரிவூ செய்தால் பெற்றுக்கொள்ளும் பயன்கள்:
- நிலையான மாதாந்த தொடர் செலவூகள்.
- பராமரிப்புத் தொல்லை இல்லை.
- காப்புறுதி தொந்தரவூ இல்லை.
- விபத்து அல்லது வாகனம் பழுதடைந்து விட்டால்இ பிரதி உபகாரமாக இலவசமாக வாகனம் ஒன்று வழங்கப்படும்.
- நாடு எங்கிலும் பரந்த வாகனம் பழுதுபார்க்கும் நிலையங்களிலிருந்து உதவி.
- 24/7 365 நாட்கள் அர்பணிப்பான வாடிக்கையாளர் சேவை.
- உங்கள் பாதுகாப்பு மற்றும் மன அமைதிக்குஇ தொழிற்திறனான வாகன மீட்புக் குழு க்கள் எப்பொழுதும் தயார் நிலையில் உள்ளனர்.
இச்சேவையின் நிதி அனுகூலங்கள் யாவை?
ஒப்பந்த காலத்திற்கு ஒரு நிலையான வாடகைத்தொகை.
வாகனத்தை கொள்வனவூ செய்வதற்குப் பதிலாகஇ உங்களது நிதியை உங்களது பிரதான வியாபாரத்தில் முதலிடுவதற்கான இயலுமை.
எல்லா பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் செலவூகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உங்களது வாகனத்தை தெரிவூ செய்வது முதல்இ நிதி வழங்கல்இ பழுது பார்த்தல்இ பராமரித்தல் மற்றும் ஒப்படைப்பு வரையான நிர்வாக வேலைகளை ஊகு ஒப்பந்த வாடகைக் குழு கையாளும்.
ஒப்பந்த காலத்திற்கு சமனான கொடுப்பனவூகள்
கொடுப்பனவூ முறையைத் தெரிவூ செய்யலாம்.
பராமரிப்புச் சேவைகளில் விரும்பியதைத் தெரிவூ செய்யலாம.
குறைந்த நிர்வாகச் செலவூகள்.
உங்கள் நிதித் திட்டமிடலை சிறப்பிக்கும்.
உங்கள் வாங்கும் சக்தியை செல்வாக்கு உட்படுத்தும் திறன்.
உங்கள் இயக்கச் செலவூகளைச் சீராக்கும்.
இத்துறையிலுள்ள எமது நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தினூடாக உங்கள் செலவைக் குறைக்கலாம்.
பழுதுபார்க்கும் செலவூகள் என்னவாகும்?
பராமரிப்புச் சேவையை உள்ளடக்கிய வாடகை ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட நீங்கள் தீர்மானித்தால்இ 8 மணித்தியாலத்திற்கு மேல் உங்களது வாகனம் பாதையில் பயணிக்க முடியாமல் போய்விடும் சந்தர்ப்பத்தில்இ அவ்வாகனத்திற்குப் பதிலாக இலவசமாக உங்களுக்கு வாகனம் ஒன்றை நாம் வழங்குவோம்.
ஆகக்குறைந்த வாடகைக்கு வழங்கும் காலம் உண்டா?
வாடகைக்கு அமர்த்தும் காலத்தைப் பொறுத்த வரையில் தெரிவூ உங்களுடையதாகும். கம்பனியின் நடைமுறை நிதிப்பாய்ச்சல் நிலைஇ பொருளாதார சுற்றௌட்டம் கம்பனியின் பொதுவான கார் கொள்கைஇ கம்பனியின் நடத்தைப் பண்பை பேணுதல் போன்ற காரணிகளைக் கருத்திற்கொண்டுஇ உங்களது கம்பனியின் தேவைகளுக்கு மிகப் பொருத்தமான ஒப்பந்த காலத்தைத் தீர்மானிக்க நாம் உதவூவோம்.
என்னிடம் தற்போதுள்ள வாகனத்தொகுதியை நான் பாவிப்பதற்குஇ அவற்றை விற்பனை செய்துஇ குத்தகைக்கு மீளப்பெறும் வசதி உண்டா?
ஆம் உண்டு. நடைமுறையிலுள்ள சந்தை விலையில் உங்களிடம் தற்போதுள்ள வாகனத் தொகுதியை அல்லது சாதனத்தை நீங்கள் சென்ட்ரல் பினான்சுக்கு விற்றுஇ மீண்டும் அவைகளை ஊகு ஒப்பந்த வாடகைக்குப் பெற்றுஇ உங்களது நிலையான சொத்தின் பெறுமதியை பெறுவதுடன் உங்களது ஐந்தொகையை மேம்படுத்திஇ வரி அனுகூலங்களையூம் பெறலாம்.
விற்பனை செய்து மீண்டும் குத்தகைக்குப் பெறுவதின் பயன்கள்.
விற்பனை மற்றும் லீசிங் பரிமாற்றலில் கவனம் செலுத்தாமல் தனது பிரதான நோக்கில் கவனம் செலுத்த உரமையாளருக்கு சந்தர்ப்பம் தருகின்றது.
ஐந்தொகை இருப்புநிலை அதிகரிக்கிறது - விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் குத்தகையை திரும்பல்; பரிமாற்றங்கள் கடனை குறைக்கலாம்.