சென்ட்ரல் ஃபைனான்ஸின் CF மாஸ்டர் மைண்ட்ஸ் வினா விடைப் போட்டியின் ஆரம்பவிழா ஜூன் 29 ஆம் தேதி மவூண்ட் லெவனியா ஹோட்டலில் நடைபெற்றது. பணியாளர்களின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு தளம் அமைத்து கொடுக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட CF மாஸ்டர் மைண்ட்ஸ் போட்டியில் 8 பிராந்தியங்களைச் சேர்ந்த 300 போட்டியாளர்கள் பிரதான பரிசை வென்று தமது பிராந்தியத்தை பெருமைப்படுத்தும் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.
நிறுவனத்தின் வரலாறுஇ விளையாட்டுஇ வரலாறுஇ புவியியல்இ அரசியல்இ கலை மற்றும் இலக்கியம் போன்ற தலைப்புகளில் போட்டியாளர்களின் அறிவை வினாடி வினா போட்டி சோதித்தது. கொழும்பு நகர அலுவலகம்இ கண்டி தலைமை அலுவலகம் மற்றும் பிராந்தியம் 05 ஆகிய அணிகள் முறையே கிராண்ட் சாம்பியன்ஸ்இ இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை வென்றன.
CFஊழியர்களின் திறமைகளை வெளிக்கொணாரும்; சென்ட்ரல் ஃபைனான்ஸின் வருடாந்த நிகழ்ச்சியாக இந்த வினை விடை போட்டி தொடரும்.