சென்ட்ரல் பினான்ஸ் பணிப்பாளர்கள் சபையின் புதிய நியமனங்கள்

30 ஜூன் 2020 மூலம் CF Admin

2020 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் வகையில் சென்ட்ரல் பினான்ஸ் பி.எல்.சியின் தலைவராக அசித தால்வத்தே நியமிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் நிதிச் சேவை நிபுணர் மஞ்சுல டி சில்வா பணிப்பாளர்கள் சபையின் நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.

2020 ஜுன் 30ம் திகதி சென்ட்ரல் பினான்ஸ் பி.எல்.சியின் தலைவராகவூம்இ நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராக ஒன்பது ஆண்டுகள் தனது கடமைகளை நிறைவேற்றிய திரு. சி.எல்.கே.பி ஜயசூரிய பணிஓய்வ+ பெற்று செல்வதன் நிமித்தமே இந்த புதிய நியமனங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கை இலங்கை மத்திய வங்கியின் 2008 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நிதிநிறுவன மேலாண்மை வழிகாட்டல்கள் பிரிவூ 4 (2) இல் உள்ள விதிகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டதாகும்.

அசித தால்வத்தே சென்ட்ரல் பினான்ஸ் பணிப்பாளர் சபையில் ஜூன் 2016 இல் ஒரு சுயாதீன நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராக இணைந்தார். இவர் இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய மேலாண்மை முகாமைத்துவ கணக்காளர்களின் உறுப்பினராவார். ICASL மற்றும் நெதர்லாந்து நாட்டின் வாகனிங்கன் பல்கலைக்கழகம் வழங்கிய வணிக மற்றும் நிதி நிர்வாகத்தில் முதுகலை டிப்ளோமா மற்றும் இலங்கையின் இலங்கை ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் MBA முதுமாமணி பட்டதாரியூமாவார்.

அவர் Ernst & Young கணக்காய்வூ நிறுவனத்துடன் 37 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியூள்ளார்இ ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தேச முகாமை கூட்டாளராக செயல்பட்டார். மேலும் மக்கள் வங்கி மற்றும் SME வங்கியின் இயக்குநராகவூம் பணியாற்றியூள்ள இவர்இ தற்போது மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட் தலைவராகவூம் பணியாற்றி வருகிறார்இ மேலும் டீசல் ரூ மோட்டார் இன்ஜினியரிங் பி.எல்.சிஇ சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சிஇ டோக்கியோ சிமென்ட் லங்கா பி.எல்.சிஇ CT ஹோல்டிங்ஸ் பி.எல்.சிஇ செவ்ரான் லூப்ரிகண்ட்ஸ் லங்கா பி.எல்.சி மற்றும் லங்கா மருத்துவமனைகள் பி.எல்.சி ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர்கள் சபையிலும் அங்கம் வகிக்கின்றார்.

திரு. மஞ்சுல டி சில்வா கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதார BA Hons (முதல் வகுப்பு) பட்டமும்இ இங்கிலாந்தின் லண்டன் பிசினஸ் ஸ்கூலில் MBA பட்டமும் பெற்றவராவார். அவர் ஒரு FCMA (UK)  மற்றும் ஒரு CGMA ஆவார். மேலும்இ பிரான்சின் INSEAD பிசினஸ் ஸ்கூல் மற்றும் அமெரிக்காவின் Harvard  பிசினஸ் ஸ்கூலில் நிர்வாகக் கல்வியைத் தொடர்ந்துள்ளார்.

அண்மையில்இ 2020 பெப்ரவரி 01ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை வர்த்தக சபையின் பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கு கடமையேற்க முன்னர்இ இவர் தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் தலைவராகவூம்இ இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் ஆணைய உறுப்பினராகவூம்இ பொது நிறுவன மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆலோசகராகவூம் பணியாற்றினார். மேலும் 9 ஆண்டுகள் HNB Assurance PLC  யின்; நிர்வாக இயக்குநராகவூம் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக மேலும் 2 ஆண்டுகளும் பணியாற்றியூள்ளார். அத்துடன் பல்வேறு முதன்னிலை தலைமைப் பதவிகளையூம் வகித்துள்ளார். பொது முகாமையாளர் – Eagle NDB Fund Management Company Ltd (தற்போது NDB Wealth Management) பொது முகாமையாளர் – கார்ப்பரேட் லைன்ஸ் மற்றும் மனித வளங்கள்இ Eagle Insurance Co. Ltd (தற்போது AIA இன்சு+ரன்ஸ்) மற்றும் பணிப்பாளர் நாயகம்இ பொது நிறுவன சீர்திருத்த ஆணையம் ஆகியன அவர் வகித்த பதவிகள் ஆகும்.

தற்போது, இவர் BPPL Holdings பி.எல்.சியின் கணக்காய்வூக் குழுவின் – நிறைவேற்றதிகாரம் அற்ற பணிப்பாளர் மற்றும் தலைவராக உள்ளார்.

மேலும் வாசிக்க

 

Licensed by the Monetary Board of the Central Bank of Sri Lanka under the Finance Business Act No.42 of 2011 and Finance Leasing Act No 56 of 2000 | Reg No: PQ 67| Credit Rating A-(lka) Outlook Stable affirmed by Fitch Ratings Lanka Limited